search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது அஷ்ரபுல்"

    வங்காள தேச அணியைச் சேர்ந்த முகமது அஷ்ரபுல்லின் ஐந்தாண்டு தடை முடிவடைய இருப்பதால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என நம்புகிறார்.
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் முகமது அஷ்ரபுல். கடந்த 2013-ம் ஆண்டு வங்காள தேசததில் நடைபெற்ற வங்காளதேசம் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதனால் அவருக்கு ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. கடந்த 2016-ல் இருந்து உள்ளூர் தொடரில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. வரும் 13-ந்தேதியுடன் அவரது தண்டனைக் காலம் முடிவடைகிறது.

    இதனால் 34 வயதாகும் அஷ்ரபுல் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஷ்ரபுல் கூறுகையில் ‘‘நான் ஆகஸ்ட் 13-ந்தேதி வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறேன்.



    நான் அந்த பிரச்சனையில் சிக்கி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் தொடரில் விளையாடினேன். தற்போது தேசிய அணியில் இடம்பெறுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. மீண்டும் வங்காள தேச அணிக்காக விளையாடுவது என்னுடைய மிகச்சிறந்த சாதனையாக இருக்கும்’’ என்றார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் அஷ்ரபுல் 23 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். சராசரியாக 47.63 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் 13 முதல்தர போட்டியில் 21.85 ரன்களே அடித்துள்ளார்.
    ×